சவுதியிலிருந்து இந்தோனேசியாவுக்கு புறப்பட்டுச்சென்ற விமானமொன்று திடீரென கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்த 75 வயதான ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதால் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் சுகயீனத்துக்குற்பட்ட நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதியளிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் இந்தோனேசிய பிரஜையென தெரிவிக்கப்பட்டுள்ளது.