டென்மார்க் விபத்தில் சிக்கிய இலங்கையரின் உயிர் காப்பு கவசத்தை நீக்க வைத்தியசாலை முடிவு

Published By: Devika

29 Apr, 2017 | 11:32 AM
image

டென்மார்க்கில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த இலங்கையரது சிகிச்சைகள் பலனளிக்காததால், அவரது செயற்கை உயிர் காப்பு சாதனத்தின் இயக்கத்தை நிறுத்திவிட வைத்தியசாலை முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

கசுன் நிரோஷன் ஃபேர்டினன்ட் (36) என்ற சமையல் கலைஞர், கடந்த திங்களன்று தனது காரில் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்ததால் மரம் ஒன்றுடன் வேகமாகச் சென்று மோதினார். இதில் அவர் படுகாயமுற்றார்.

இதையடுத்து, ஹெலிகொப்டர் மூலம் கசுன் வைத்தியசாலைக்குத் தூக்கிச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. உடல் நிலை தேறலாம் என்ற நம்பிக்கையில் செயற்கை உயிர் காப்பு சாதனமும் அவருக்குப் பொருத்தப்பட்டது.

இந்த நிலையில், அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், செயற்கை உயிர் காப்பு சாதனத்தை அகற்றிவிட வைத்தியசாலை முடிவெடுத்துள்ளது.

டென்மார்க்குக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வந்தவர் கசுன். டென்மார்க்கின் பிரபலமான ‘சோல்ட் எண்ட் பெப்பர்’ உணவகத்தில் பணியாற்றிவந்தார். திருமணமான இவர், தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் விரைவில் டென்மார்க்குக்கு அழைத்துக்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில்தான் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மிகவும் கனிவான மனமும், தோழமை உணர்வுடன் பழகும் சுபாவமும் கொண்ட கசுனின் இழப்பு அதிர்ச்சி தருவதாக குறித்த உணவகத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.

இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து டென்மார்க் பொலிஸார் ஆராய்ந்து வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19