இம்­முறை கூட்டு எதி­ரணி காலி­மு­கத்­தி­டலில் நடத்தும்  மே தினக்­கூட்­ட­மா­னது அர­சாங்­கத்­திற்கு மிகப்­பெ­ரிய செய்­தியை கூறு­வ­தாக அமையும். மிகப் பிர­மாண்­ட­மான மேதி­னக்­கூட்­டத்தை நாங்கள் நடத்துவோம் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான  பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார். 

எமது மே தினக்­கூட்­டத்­திற்கு நாட்டில் அனைத்து பாகங்­க­ளி­லி­ருந்தும் மக்கள் கலந்­து­கொள்­வார்கள். வடக்கு, கிழக்கு, மலை­யகம் என அனைத்துப் பகு­தி­க­ளி­லிருந்தும் மக்கள் பங்­கேற்­பார்கள். 

மேலும் மக்­க­ளினால் காலி­மு­கத்­தி­டலை நிரப்­பு­வது எமக்­கொரு பிரச்­சி­னையே அல்ல. ஆனால் மக்கள் நிரம்பி வழிந்து கடலில் வீழ்ந்து விடு­வார்­களோ என்­றுதான் பயப்­ப­டு­கின்றோம் என்றும் பஷில் ராஜ­பக் ஷ சுட்­டிக்­காட்­டினார். 

கூட்டு எதி­ர­ணி­யி­னரால் காலி­மு­கத்­தி­டலில் நடத்­தப்­ப­ட­வுள்ள மேதினக் கூட்டம் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்:

கூட்டு எதி­ரணி இம்­முறை காலி­மு­கத்­தி­டலில் நடத்தும் மே தினக்­கூட்­டத்தில்   நாட்டில் அனைத்­துப்­ப­கு­தி­க­ளி­லி­ருந்தும் மக்கள் கலந்து கொள்­வார்கள், வடக்கு, கிழக்கு, தெற்கு, மலை­யகம் அனைத்துப் பகு­தி­க­ளி­லி­ருந்தும் மக்கள் எமது கூட்­டத்தில்  பங்­கேற்­பார்கள். 

மலை­யகத் தோட்ட மக்கள் அதி­க­ளவில் இம்­முறை பங்­கேற்­பார்கள். அத்­துடன் ரயில், பஸ், வேன், கார், மோட்டார் சைக்கிள் என அனைத்து வித­மான வாக­னங்­க­ளிலும் பொது­மக்கள் எமது கூட்­டத்­திற்கு வரு­வார்கள். 

25 வரு­டங்­களின் பின்னர் எதிர்க்­கட்சி ஒன்­றுக்கு காலி­மு­கத்­திடல் கிடைத்­துள்­ளது.  அதை நாங்கள் சரி­யான முறையில் பயன்­ப­டுத்­துவோம். ஏற்­பா­டுகள் அனைத்தும் பூர்த்­தி­யா­கி­யுள்­ளன. வர­லாற்று ரீதி­யான மேதி­னக்­கூட்­டத்தை நாங்கள் வழங்­குவோம். 

கேள்வி : காலி முகத்­தி­டலை கூட்டு எதி­ர­ணி­யி­னரால்  நிரப்ப முடி­யாது என சவால் விடுக்­கப்­பட்­டுள்­ளதே?

பதில் : காலிமுகத்திடலை நிரப்புவது எமக்கொரு பிரச்சினையே அல்ல. ஆனால் மக்கள் நிரம்பி வழிந்து கடலில் வீழ்ந்து விடுவார்களோ என்றுதான் பயப்படுகின்றோம் என்றார்.