மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையில் முன்­னெ­டுக்கும் செயற்­பா­டுகள் உடன் நிறுத்­தப்­படும் சாத்­தியம்

Published By: Priyatharshan

29 Apr, 2017 | 09:30 AM
image

அம்­பாறை இறக்­காமம் மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையில் பௌத்த விகா­ரை­யொன்றை அமைப்­ப­தற்கு முன்­னெ­டுக்கும் செயற்­பா­டுகள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­படும் சாத்­தியம் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹபிஸ் நசீர் அஹமட் ஆகி­யோ­ருக்­குமி­டை­யி­லான  சந்­திப்­பொன்று நேற்று வௌ்ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்ற வளா­கத்தில் நடை­பெற்­றது.

இதன்­போது குறித்த விடயம் சம்­பந்­த­மாக இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டல்­களை அடுத்தே மேற்­கண்­ட­வா­றான நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

இச்­சந்­திப்­புக்கு குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

அம்­பாறை மாயக்­கல்லி மலையில் பௌத்த விகா­ரை­யொன்றை அமைப்­ப­தற்­காக காணி­களை அள­விடும் செயற்­பா­டுகள் கடந்த புதன்­கி­ழ­மை­யன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

தழிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பகு­தியில் இவ்­வா­றான விகாரை அமைப்­ப­தற்­காக  காணி அள­விடும் செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­பட்­ட­மை­யா­னது பல்­வேறு சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இந்­நி­லையில் இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் ஆகியோர் இணைந்து செயற்­ப­டு­வ­தென நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற சந்­திப்பில் இணக்­கப்­பாட்­டினை எடுத்­தி­ருந்­தனர்.

அதற்­க­மை­வாக நேற்­றைய தினம்  மீதொட்ட முல்ல குப்பை மேடு அனர்த்தம் சம்­பந்­த­மான விவா­த­தினை நேரில் அவ­தா­னிப்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தந்­தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­த­ரி­பால சிறி­சே­னவை இரா.சம்­பந்தன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் கூட்­டாக சந்­தித்­தி­ருந்­தனர்.

இதன்­போது மாயக்­கல்லி மலையில் விகாரை அமைப்­ப­தற்­காக எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் அத­னை­ய­டுத்து எழுந்த சர்க்­சைக்­கு­ரிய நிலை­மைகள் தொடர்­பாக ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு இரு தலை­வர்­க­ளாலும் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

அத­னை­ய­டுத்து இறக்­காமம் மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையை  அண்­டிய பகு­தியில்  சிறு­பான்­மை­யி­னரின் காணி­களே உள்­ளன. அவர்­களின் காணி உறு­திகள்  உள்­ளிட்ட ஆவ­ணங்கள்  ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டன.

ஆத்­துடன் கடந்த அர­சாங்க காலத்தில் சிறு­பான்மை இனங்­க­ளுக்கு குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு மதத்தின் பெயரால் இழைக்­கப்­பட்ட அநீ­திகள் தொடர்­பா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

ஆகவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்த்தில் மீண்டும் அவ்­வா­றான நிலை­மைகள் ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­க­கூ­டாது எனவும் இரு தலை­வர்­க­ளாலும் கோரப்­பட்­டது.

இச்­சந்­தர்ப்­பத்தில் குறித்த விடயம் சம்­பந்­த­மாக உட­ன­டி­யாக தான் கவனம் செலுத்­து­வ­தா­கவும் நிலை­மை­களை ஆராய்­வ­தோடு அநீ­தி­யான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது எனவும் குறிப்­பாக முறை­யற்ற வகையில் மேற்­கொள்­ளப்­படும் இத்­த­கைய செயற்­பாட்டை உடன் நிறுத்­து­வ­தற்­கான நட­டி­வக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கு­ரிய பணிப்­பு­ரை­களை வழங்­குவேன் எனவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்­ட­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

இதே­வேளை இச்­சந்­திப்பில் கலந்து கொண்ட  கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறித்த  சந்­திப்பு தொடர்பில் தெரி­வித்­துள்­ள­தா­வது,

 இறக்­காமம் மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையை  அண்­டிய பகு­தியில்  சிறு­பான்­மை­யி­னரின் காணி­களே உள்­ளன. அவர்­களின் காணி உறு­திகள்  உள்­ளிட்ட ஆவ­ணங்கள்  ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டன. இது தொடர்பில் ஜனா­தி­பதி விசேட  கவனம் செலுத்­தி­யுள்ளார்.

எதிர்க்­கட்சித்  தலைவர்  இரா.சம்­பந்தன் மற்றும் ஸ்ரீரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர்  ரவுப் ஹக்கீம் ஆகியோர்  மாணிக்­க­மடு  தொடர்பில்  ஜனா­தி­ப­தி­யிடம் பல அழுத்­த­மான கோரிக்­கை­களை விடுத்­தனர். எனவேஇ  இது  தொடர்பில் ஜனா­தி­ப­தியால் சாத­க­மான  நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டுக்­கூ­டிய சாத்­தி­யங்கள் உள்­ளன.

இத­னை­ய­டுத்து  மாணிக்­க­மடு  விவ­காரம்  தொடர்பில் கிழக்கின் ஆளுநர் மற்றும் அம்­பாறை மாவட்ட  அரச அதி­ப­ரி­டமும் உட­ன­டி­யாக ஜனா­தி­பதி  பேச்சு நடத்­தி­யுள்ளார். இதன்­போது  அவர்­க­ளுக்கு ஜனா­தி­பதி பல சாத­க­மான  பணிப்­பு­ரை­களை விடுத்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.

சிறுபான்மையினரின்  பிரச்சினைகளின் போது  தமிழ்இ முஸ்லிம் தலைமைகளான  எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்படுவது  வரவேற்கத்தக்க விடயம். இவ்வாறான  தருணங்கள்  சிறுபான்மையின அரசியல் வரலாற்றில்  பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

சிறுபான்மையினருக்கான நலன்களுக்கு குந்தகம் ஏற்படுகின்றபோது தமிழ் மற்றும் முஸ்லிம்  அரசியல் பிரதிநிதிகள் இணைந்து  குரல் கொடுப்பதன் ஊடாக பாரிய வெற்றிகளை எட்ட முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27