மட்டக்களப்பு, கல்குடாவில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் மதுபானசாலை தொடர்பாக பல எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் இந்த மதுபானசாலையை  நிர்மாணிக்க வேண்டும் என்று தெரிவித்து மட்டகளப்பில் ஒரு படித்த நிபுணத்துவ குழு ஒன்று தற்போது உருவாகி மக்களின் மூளையை சலவைசெய்ய ஆரம்பித்துள்ளது.

மதுபானசாலை தொடர்பாக விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் ஒன்று நேற்றய தினம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மட்டக்களப்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு குறித்த படித்த நிபுணத்துவ குழுவின் உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நிபுணத்துவ குழுவின் முக்கிய உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இருப்பதாகவும் இங்கு இந்த குழுவை சில வைத்தியர்கள், பொறியியலாளர்கள், வளவாளர்கள், புத்திஜீவிகள்  என ஒரு சிலர் கடந்த 4 ஆம் மாதம் 12 ஆம் திகதியில் இருந்து இயக்கி வருவதாக தெரிவித்துள்ளனர் .

இந்த மதுபானசாலையில் வடிப்பது  எத்தனோல் மட்டுமே. அது சாராயம் இல்லை. இதற்கு மக்களும் ஊடகவியலாளர்களும் ஆதரவளிக்க வேண்டும்.

நாங்கள் படித்த நிபுணத்துவக்குழு எங்களுக்கு இந்த மதுபான தொழிற்சலை மிக முக்கியமான ஒன்று இதை தடை செய்வது மிகவும் வருத்தத்திகுரிய விடயம்.

இந்த குழு மதுபானசாலையை அமைக்க வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருப்பதாகவும் இதன் மூலம் பல நன்மைகளைப்பெற முடியும் என்றும் இதற்காகவே தாங்கள் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பல காலமாக தாங்கள் செயற்படுவதற்கு நினைத்திருந்தும் தற்போது மதுபானசாலையை நிர்மாணிக்க வேண்டும் என்பதே தங்களது முதல் நடவடிக்கையாக எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.