மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இருவரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியின் தந்தையின் நண்பர் உட்பட இருவரே குறித்த சிறுமியை நேற்று துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 54 மற்றும் 55 வயதான இருவர் நேற்று கைதுசெய்யப்பட்டு, இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே குறித்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.