இசையமைப்பாளராக இருந்து இயக்குநராக மாறியவர்கள் பட்டியலில் ஓஸ்கர் புயல் ஏ ஆர் ரஹ்மானும் இணைந்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் முதல் படம் ‘லே மஸ்க் ’ (Le Musk) இதில் ஹொலிவூட் நடிகைகளான நோரா அர்னேஸதார் மற்றும் முனிரா கிரேஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். இதன் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. இதனை இணையவாசிகள் பெரும் ஆதரவுடன் வரவேற்றிருக்கிறார்கள். 

இதில் ஏ ஆர் ரஹ்மான் தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பல பணிகளை சுமந்திருக்கிறார். இந்த படத்தின் கதையை தனதுமனைவி சாய்ராவுடன் இணைந்து எழுதியிருக்கிறார் ரஹ்மான். இந்த படம் முதலில் வெளியாகவிருக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி மூவி என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனை கனடாவிலுள்ள ஐடியல் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் ஏ ஆர் ரஹ்மான் இயக்கவிருக்கும் 99 சாங்ஸ் மற்றும் ஒன் ஹார்ட் ஆகிய இரண்டு படங்களையும் தயாரிக்கவிருக்கிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் வெளியீடு, மே மாதம் 10 ஆம் திகதியன்று இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

தகவல் : சென்னை அலுவலகம்