ஜெய்பூரில் விமானம் கடத்தப்பட்டதாக, பிரதமர் மோடிக்கு பயணிகள் டுவிட் செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று மும்பையில் இருந்து டெல்லிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்று கொண்டிருந்தது. ஆனால், டெல்லியில் வானிலை மோசமாக இருந்ததால், விமானம் ஜெய்பூருக்கு திருப்பிவிடப்பட்டது.

இதனிடையே அதிக தூரம் பயணிப்பதை உணர்ந்த பயணிகள் சிலர், பிரதமர் மோடிக்கு அவசர டுவிட் ஒன்றை செய்துள்ளனர். அதில் கடந்த 3 மணி நேரத்திற்கு மேலாக தாங்கள் விமானத்தில் இருப்பதாகவும், எனவே தங்கள் விமானம் கடத்தப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் டுவிட் செய்துள்ளனர்.

இதையடுத்து விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் அறிவிக்கப்பட்டு மேற்கொண்ட விசாரணையில் விமானம் ஜெய்பூருக்கு திருப்பிவிடப்பட்டது அறியப்பட்டது.