யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 10 ஆவது மற்றும் 12 சந்தேகநபர்களை விடுதலைசெய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இருவரையும்  விடுதலை செய்யுமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று 10 ஆவது மற்றும் 12 ஆவது சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.