நாடு முழு­வதும்  கிராம சேவை­யா­ளர்­க­ளுக்­கு 2000  வெற்­றி­டங்கள்  நில­வு­வ­தாக  அரச முகா­மைத்­துவ மற்றும்  உள்­நாட்டு  அலு­வல்கள் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

 கிராம சேவை­யா­ளர்­க­ளுக்­கான போட்­டிப்­பரீட்சை  பெறு­பே­றுகள் வெளியா­னதன் பின்னர்  குறித்த  வெற்­றி­டங்கள்  நிரப்­பப்­படும்  என அமைச்சர்  வஜிர அபே­வர்­தன  குறிப்­பிட்­டுள்ளார். இருப்­பினும் தற்­போது  வெற்­றி­டங்கள் நிலவும்  பகு­தி­க­ளுக்கு  ஒப்பந்த  ரீதியில்  கிராம சேவை­­யா­ளர்கள்  நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்  அவர் தெரி­வித்தார். விரைவில்  நாட­ளா­விய ரீதியில்  காணப்­படும் கிராம சேவை­யா­ளர்­க­ளுக்­கான  வெற்­றி­டங்­க­ளுக்கு  சிறந்த நபர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்