ஊடக சுதந்­திரத்தில் இலங்கைக்கு 141 ஆவது இடம்

Published By: Robert

28 Apr, 2017 | 10:42 AM
image

ஊடக சுதந்­திரம் குறித்து எல்­லை­க­ளற்ற ஊட­க­வி­ய­லாளர் அமைப்பால் 180 நாடு­களை உள்­ள­டக்கி நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை வெளி­யி­டப்­பட்ட இந்த ஆண்­டுக்­கான வரு­டாந்த பட்­டி­யலில் இலங்கை 141 ஆவது இடத்­தி­லுள்­ளது. 

மேற்­படி அமைப்பால் ஊடக சுதந்­திர பட்­டி­யலை உள்­ள­டக்கி வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில் ஊடக சுதந்­திரம் ஒரு­போதும் அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கப்­படக் கூடாது என வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. 

இந்தப் பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள நாடு­களில் 62 சத­வீ­த­மான நாடு­களில் இந்த வரு­டத்தில் ஊடக சுதந்­தி­ரத்தில் வீழ்ச்சி நிலை காணப்­ப­டு­வ­தாக அந்த அறிக்கை தெரி­வி

க்­கி­றது. 

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான சுதந்­திரம் உயர் மட்­டத்தில் பேணப்­படும் நாடு­களில் முத­லி­டத்தில் நோர்வே உள்­ளது. இதற்கு அடுத்து வரும் இடங்­களில் சுவீடன், பின்­லாந்து, டென்மார்க், நெதர்­லாந்து ஆகிய நாடு

கள் உள்­ளன.  ஊட­க­வி­ய­லா­ளர்­களின் சுதந்­தி­ரத்­துக்கு கடும் முட்­டுக்­கட்­டை­களை விதித்­துள்ள வட கொரி­யா­வா­னது இந்தப் பட்­டி­யலில் இறுதி இட­மான 180 ஆவது இடத்­தி­லுள்­ளது. அந்­நாட்­டிற்கு அடுத்­த­தாக ஊடக சுதந்­திரம் மிக மோச­மான நிலை­யி­லுள்ள நாடு­க­ளாக எரித்­தி­ரியா, துர்க்­மெ­னிஸ்தான், சிரியா, சீனா ஆகிய நாடுகள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. 

அதே­ச­மயம் கடந்த ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் லாவோஸ், பாகிஸ்தான், சுவீடன், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடு­களில் ஊடக சுதந்­திரம் முன்­னேற்ற நிலையில் உள்­ள­தாக தெரி­விக்கும் அந்த அறிக்கை சவூதி அரே­பியா, எதி­யோப்­பியா, மாலை­தீவு மற்றும் உஸ்

­பெ­கிஸ்தான் ஆகிய நாடு­களில் ஊடக சுதந்­திரம் கடந்த ஆண்­டுடன்  ஒப்­பி­டு­கையில் பெரி

தும் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாக கூறு­கி­றது. 

அதே­ச­மயம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் ஊட­கங்கள் போலி­யான செய்­தி­களை வெ ளியிட்டு வரு­வ­தாக அவற்றை அடிக்­கடி தாக்கிப் பேசு­வதை வழ­மை­யாகக் கொண்­டுள்­ளமை குறித்து மேற்­படி அறிக்­கையில் கண்­டனம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்தப் பட்­டி­யலில் அமெ­ரிக்கா 43 ஆவது இடத்­தி­லுள்­ளது. அந்­நாடு கடந்த ஆண்டில் அது பெற்­றி­ருந்த நிலை­யி­லி­ருந்து இரு இடங்­களால் இந்த ஆண்டில் வீழ்ச்சி கண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 

ஐரோப்­பிய ஒன்­றியம் இந்தப் பட்­டி­யலில் 40 ஆவது இடத்திலும் இந்தியா 136 இடத்திலும் உள்ளன. 

அதேசமயம் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பிராந்தியங்கள் ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் மோசமான இடங்களாக உள்ளதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவிக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்