குருணாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புத்தளம் பிரதான வீதியின் மாஸ்பொத்த பகுதியில்  வைத்து உப பொலிஸ் பரிசோதகர் ஏக்கநாயக்க கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இவர் பலியாகியுள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

மாத்தறை ரொஷான் என அழைக்கப்படும் டி.கே. சமிந்த என்பவரே இவ்வாறு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் குருணாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புத்தளம் பிரதான வீதியின் மாஸ்பொத்த பகுதியில் கடத்தல் சந்தேக நபர்களைக் கைது செய்ய சென்றபோது உப பொலிஸ் பரிசோதகர் ஏக்கநாயக்க (59) சுட்டுக்கொல்லப்பட்டதுடன், இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.