பாலிவுட் சினிமாவில் 1970 - 80 ஆம் ஆண்டுகளில் முன்னணி ஹீரோவாகத் திகழ்ந்த வினோத் கன்னா, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 

வினோத் கண்ணா 1968 ஆம் ஆண்டு மேன் ஹா மீட் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மேரே அப்னே, மேரா ஹோன் மேரா தேஷ், இமிதிஹான், இங்கார், அமர் அக்பர், அந்தோனி, லகு ஹி டூ ரங், குர்பானி, தயவான் மற்றும் ஜர்ம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக ஷாருக்கான் நடித்த தில்வாலே படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் வினோத் கண்ணாவின் மரணம் குறித்து அமிதாப்பச்சன் மற்றும் ரஜினிகாந்த் என்போர் தமது இரங்கல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.