ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொட­ரி­லி­ருந்து இந்­திய அணி வில­கு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் இந்­திய அணி வில­காது என்று கிரிக்கெட் சபை வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடர் எதிர்­வரும் ஜூன் மாதம் ஆரம்­ப­மா­கின்­றது. 

இந்­தப்­போட்­டிக்­கான அணி வீரர்­களை அறி­விப்­ப­தற்­கான காலக்­கெடு நேற்­று­முன்­தி­னத்­துடன் (25ஆம் திகதி) முடிந்­து­விட்­டது. இந்­தி­யாவை தவிர மற்ற 7 நாடு­களும் இந்­தப்­போட்­டிக்­கான அணி­களின் வீரர்­களை அறி­வித்­து­விட்­டன.

இதனால் சம்­பியன்ஸ் கிண்ணப் போட்­டியில் இந்­தியா பங்­கேற்­பது சந்­தேகம் என்ற தகவல் வெளி­யா­னது. வருவாய் பகிர்வு தொடர்­பாக ஐ.சி.சி. தலைவர் மனோ­கரின் யோச­னையை இந்­திய கிரிக்கெட் சபை நிரா­க­ரித்து இருந்­தது. அத்தோடு வீரர்­களை அறி­விக்­கா­மலும் இருந்­தது. இதன் கார­ண­மாக இந்த சந்­தேகம் உரு­வா­னது.

இதற்­கி­டையே சம்­பியன்ஸ் கிண்ணப் போட்­டியிலிருந்து இந்­திய அணி வில­காது என்று கிரிக்கெட் சபை வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. 

ஐ.சி.சி.யின் கூட்­டத்­துக்கு பிறகு சம்­பியன்ஸ் கிண்­ணத்­திற்­கான இந்­திய அணியை கிரிக்கெட் சபை அறி­விக்கும் என்றும் பி.சி.சி.ஐ. வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

இந்­நி­லையில் அணி வீரர்­களை அறி­விக்கும் கடைசி நாளில் இங்­கி­லாந்து மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளனர். 

அதன்­படி அறி­விக்­கப்­பட்­டுள்ள 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில்இ அவுஸ்­தி­ரே­லிய ஒரு நாள் தொடரில் ஏற்­பட்ட தோல்­விக்­காக கழற்­றி­வி­டப்­பட்ட அசார் அலிஇ உமர் அக்மல் மீண்டும் அணிக்கு திரும்­பி­யி­ருக்­கி­றார்கள். அதே சமயம் பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் தொடர்­நா­யகன் விருதை பெற்ற கம்ரன் அக்மல் நீக்­கப்­பட்­டுள்ளார். 

பாகிஸ்தான் அணி விபரம்: சர்ப்ராஸ் அஹ­மது (தலைவர்)இ அஹ­மது ஷேசாத்இ அசார் அலிஇ ஹபீஸ்இ பாபர் அசாம்இ சோயிப் மாலிக்இ உமர் அக்மல்இ இமாத் வசிம்இ பஹார் ஜமான்இ பஹிம் அஷ்ரப்இ அமிர்இ வஹாப் ரியாஸ்இ ஜூனைட் கான்இ ஹசன் அலிஇ ஷதப் கான்.

இந்த தொட­ருக்­காக இங்­கி­லாந்தும் பல­மான அணியை கள­மி­றக்­கி­யுள்­ளது. 

இங்கிலாந்து விபரம் 

இயான் மோர்கன் (தலைவர்)இ மொயீன் அலிஇ பேர்ஸ்டோஇ ஜோக்

போல்இ சாம் பில்லிங்ஸ்இ ஜோஸ் பட்லர்இ அலெக்ஸ் ஹாலஸ்இ லியாம் பிளங்கெட்இ அடில் ரஷித்இ ஜோ ரூட்இ ஜோசன் ரோய்இ பென் ஸ்டோக்ஸ்இ டேவிட் வில்லிஇ கிறிஸ் வோக்ஸ்இ மார்க் வுட்.