10 வருடங்கள் கடந்தும்  எனக்கு நீதி கிடைக்கவில்லை :  படுகொலைசெய்யப்பட்ட  மாணவரின் தந்தை  

Published By: MD.Lucias

12 Jan, 2016 | 10:48 AM
image

எனது மகன் படுகொலை செய்யப்பட்டு பத்து வருடங்களாகியும் சர்வதேச அளவிலும் சரி உள்நாட்டு நீதிமுறையிலும் சரி எனக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று  திருகோணமலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான மனோகரன் ரஜீகரின் தந்தை டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு  மேலும் கூறியிருப்பதாவது,

எனது மகன் 2006 ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம்  திகதி திருகோணமலை கடற்கரையில்   ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை தொடர்பில் ஜெனீவா மனித உரிமைப் பேரவை உட்பட பல அமைப்புக்களிடம் பதிவு செய்திருந்தேன்.

ஆனால் 10 வருடங்களாகியும் உலக அரங்கிலேயே எனக்கு தீர்வு கிடைக்கவில்லை.  தீர்வு தாமதமாவது    தீர்ப்பு கிடையாது என்பதற்கு  சமமானதாகும்.

புதிய அரசாங்கம் வந்திருக்கின்ற காரணத்தினால் ஏதாவது நியாயம் கிடைக்குமென நம்பியிருந்தேன்.  ஆட்சி மாற்றம் நடைபெற்றிருக்கிறதே தவிர வேறு எந்த பயனையும் காணமுடியவில்லை. உண்மையாக நடந்த படுகொலைக்கு தீர்ப்பு வழங்க தயக்கம் காட்டும் புதிய அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களுக்கான நீதியையும் தீர்வையும் வழங்கப்போகிறது என்பது தெரியாமல் உள்ளது.

ஐ.நா. மனித உரிமைப் பேரவை கடந்த அமர்வில் ஓர் ஆலோசனையை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தது. மேற்படி சம்பவத்தை விசாரணை செய்து குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமென்று கூறியிருந்தது.  எனக்கு திருகோணமலையிலிருந்து கிடைத்த தகவலின்படி விசாரணையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லையென்று கூறப்படுகின்றது.  சட்டமா அதிபர் காரியாலயத்துடன் நான் தொடர்பு கொண்டபோதும் விசாரணைகளைத் தொடர முடியவில்லையெனக் கூறுகிறார்கள். அவர்கள்  முக்கியமான சாட்சியங்கள் இலங்கையிலில்லை என்று கூறுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கத்தை நான் நம்பத்தயாரில்லை. ஆனபடியால் ஐ.நா.  மனித உரிமை ஆணைக்குழுவுக்கு ஒரு தாழ்மையான கோரிக்கையை விடுக்கவிரும்புகின்றேன். இப்படுகொலை சம்பந்தமாக சர்வதேச நீதிமன்றின் முன்விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். அப்போதுதான் எனக்கு விமோசனம் கிடைக்கும்.

தந்தையென்ற வகையில் எனது மகனை நான் திருப்பிப் பெறப்போவதில்லை.  ஆனால் இப்படியான கொலைகளும் அட்டூழியங்களும் மீண்டும் இலங்கையில் தலைதூக்கக் கூடாது என்பதற்காகவே இப்போராட்டத்தை நடாத்துகிறேன். கொலையாளிகள் உலக அரங்குமுன் காண்பிக்கப்பட வேண்டுமென்பதே எனது கோரிக்கையாகுமென மனோகரன் குறிப்பிட்டிருந்தார். இவர்  தற்பொழுது இங்கிலாந்தில் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37