அதிரடி காட்டிய ரொபின் உத்தப்பா : கொல்கத்தாவிடம் வீழ்ந்தது பூனே

Published By: Ponmalar

27 Apr, 2017 | 01:17 PM
image

ஐ.பி.எல்.தொடரின் நேற்றைய போட்டியில் பூனே அணியை எதிர்கொண்ட கொல்கத்தா அணி 7 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பூனே அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பூனே அணி சார்பில் அணித்தலைவர் ஸ்மித் 51 ஓட்டங்களையும், ரஹானே 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் குல்டீப் யாதவ் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி ரொபின் உத்தப்பாவின் அதிரடியின் உதவியுடன் 18.1 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரொபின் உத்தப்பா 47 பந்துகளில் 87 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இதேவேளை போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் ரொபின் உத்தப்பா தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த போட்டியின் முடிவின்படி புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் கொல்கத்தா முதலாவது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், பூனே 8 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49