கிழக்கு மாகாணத்தில்  இன்று  (27) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுன்றது.இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ், முஸ்லிம் மக்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிப்பு, வடக்கு கிழக்கு  வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் மற்றும் காணமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டங்களில் குதித்துள்ள நிலையில், வடக்கு, கிழக்கு மாணங்களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதனால் வர்த்தக நிலையங்கள் பாடசாலைகள் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.

தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை. அரச போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறுகின்றன. ஹர்த்தால் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.