மோடியை சந்தித்தார் ரணில் : கலந்துரையாடிய முழுமையான தகவல்கள் வெளியானது

26 Apr, 2017 | 07:51 PM
image

(புதுடில்லியிலிருந்து க.கமலநாதன்)

இலங்கையில் இடம்பெற்ற யுத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை நிவர்த்தித்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவி வழங்குதல் மற்றும் திருமலை துறைமுக அபிவிருத்தி பணிகளில் கூட்டு செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டது.

இயற்கை வாயு உற்பத்தி சூரிய சக்தி நிலையங்கள் உருவாக்கம், திருகோணமலை நகர அபிவிருத்தி, திருகோண மலை துறைமுக அபிவிருத்தியின் போது இலங்கை பெற்றோலி கூட்டுத்தாபனத்துடன் கூட்டு அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபடுதல், திருமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் தாங்கிகள் கட்மைப்பினையும் அபிவிருத்தி செய்தல், வீதி அபிவிருத்தி, புகையிரத சேவை புதுப்பிப்பு, விவசாயம் மற்றும் நீர் முகாமைத்துவச் செயற்பாடுகள் உள்ளிட்ட காரணங்கள் குறித்து முக்கிய மேற்படி ஒப்பந்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோக பூர்வ வாசஸ்தலமான ஐத்ராபாத் இல்லத்தில் இடம்பெற்றம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற முத்தரப்புச் சந்திப்பின் போதே மேற்படி விடயங்கள் குறித்து அவதானம் செலுதப்பட்டன.

இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து, இந்து சமுத்திரத்தின் பொருளாதார மத்திய ஸ்தானமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கும் சமூக பொருளாதார கொள்கையின் மேம்பாட்டிற்காகவும் இந்தியாவின் முழுமையான உதவிகளை வழங்கி சக்திமிக்க இலங்கையை உருவாக்குவதற்கு வழிசெய்வதற்கு இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன் போது இருநாட்டு பிரதமர்களும் சமுத்திர பாதுகாப்பு, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து பிராந்திய அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆலோசித்து இணக்கப்பாட்டினை எட்டியிருந்தனர்.

 

அதேநேரம் இலங்கை இந்திய நட்புறவை  பேணுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்னெடுப்புக்களையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அத்துடன் வருகின்ற மே மாதத்தில் தான் இலங்கைகான விஜயத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பதில் பொறுப்புடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முகாமைத்துவ செயற்பாடுகள், தொழில்நுட்ப செயற்பாடுகள், தகவல் தொடர்பாடல் செயற்பாடுகள் விருத்தி, பல்கலைக்கழக புத்துருவாக்கச் செயற்பாடுகள் ஆகிய செயற்பாடுகளுக்கு இந்தியாவின் உதவியையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்தார். அதேநேரம் தற்சமயம் இந்திய உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பின் பின்னர் இந்தியா பொருளாதார ரீதியில் மேம்பாடுகளை அடையும் நாடாக மாறியுள்ளது. இது இலங்கை  போன்ற நாடுகளின் பொருளாதார ஸதீர தன்மைக்கு பாதுகாப்பாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

யுத்தின் போது பாதிக்கப்பட்டவர்களிள் மனப்பாதிப்புக்களை நிவரத்தி செய்து நாட்டினுல் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புகள்ளில் துரித அவதானம் செலுத்த வேண்டும் எனவும் இந்திய பிரதமர் சுட்டிக்காட்டினார். அத்துடன் நிலையான அபிவிருத்திக்கான இலங்கையின் முன்னெடுப்புக்களை மேலும் சீர்படுத்துமாரும் அறிவுறுத்தினார்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20