(ஆர்.யசி)

Image result for மக்கள் விடுதலை முன்னணி virakesari

ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பலப்படுத்தி தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கம் தமது இலக்கில் இருந்து மாறிவிட்டது. இந்த அரசாங்கம் பலமான அரசாங்கம் அல்ல ஆகவே மக்களால் இலகுவாக இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. இந்த மே தினத்தை மக்கள் புரட்சி தினமாக மாற்றி அரசாங்கத்தை வீழ்த்தும் பயணத்தை ஆரம்பிப்போம் எனவும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்  போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.