வவுனியா பிரதான மணிக்கூட்டுப் கோபுரத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று (26) காலை 9 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் தலைமையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகத்தின் 40 ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வர்த்தகர் சங்கத் தலைவர் ரி. கே. இராஜலிங்கம், தமிழரசுக்கட்சி வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்கள்.