ஹேமாத்தகம பகுதியில் பெற்ற தாய் மற்றும் தந்தையை தாக்கி கொலை செய்த கொடூரச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த பெற்றோரின் மகன் ஒருவர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில்  73 வயதான தாய் மற்றும் 76 வயதான தந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளதுடன், 36 வயதான மகன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொலை சம்பவத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.