இந்­தி­யாவில் பயிற்­சியின் இடை­ந­டுவே இலங்கை கடற்­படை சிப்பாய் உயி­ரி­ழப்பு

Published By: Priyatharshan

26 Apr, 2017 | 10:35 AM
image

இந்­தி­யாவின் கொச்சி கடற்­படை பயிற்சி தளத்தில் பயிற்­சி­களில் ஈடு­பட்­டி­ருந்த இலங்கை கடற்­படை வீரர் ஒருவர் பயிற்­சியின் இடை நடுவே உயி­ரி­ழந்­துள்ளார்.

குரு­ணாகல் பகு­தியைச் சேர்ந்த 39 வய­தான வை.பி.என்.ஆர். வீர­சிங்க எனும் கடற்­ப­டையின் ' டைவிங்' வீரரே இவ்­வாறு நேற்று முன் தினம் மாலை வேளையில் உயி­ரி­ழந்­துள்­ள­தாக கடற்­படை ஊடகப் பேச்­சாளர் லெப்­டினன் கொமாண்டர் சமிந்த வலா­கு­லுகே தெரி­வித்தார்.

இது தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது,

கொச்சி கடற்­படை தளத்­துக்கு உட்­பட்ட கேரளா - எர்­னா ­குளம் கடற்­படை பயிற்சி மையத்தில் வழ­மை­யாக இடம்­பெறும் பயிற்சி நட­வ­டிக்­கை­களில் குறித்த கடற்­படை வீரரும் பங்­கேற்­றுள்ளார். கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் அங்கு பயிற்­சியில் உள்ள மேற்­படி கடற்­படை வீரர்இ எர்­ணா­குளம் பகு­தியில் இடம்­பெறும் வழ­மை­யான பயிற்­சியின் இடை நடுவே நீரின் ஆழத்­துக்கு சென்­றுள்ளார்.

 

பயிற்­சியின் பிர­காரம் நீருக்குள் இருந்து அவர் மீளவும் டைவிங் செய்து மேலே வர வேண்டும். எனினும் உரிய நேரம் கடந்தும் அவர் நீரின் மேற்­ப­ரப்­புக்கு வரா­ததால் பயிற்சி மேற்­பார்வை அதி­காரிஇ உட­ன­டி­யாக குறித்த கடற்­படை வீரரை தேடும் பணி­யினை ஆரம்­பித்­துள்ளார்.

இதன் போதே நீருக்குள் இருந்து குறித்த வீரர் குற்­று­யி­ருடன் மீட்­கப்­பட்டு முத­லு­தவி அளிக்­கப்­பட்ட நிலையில் உட­ன­டி­யாக கடற்­படை வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­லப்­பட்­டுள்ளார். எனினும் அங்கு சிகிச்­சைகள் எதுவும் பல­ன­ளிக்­காத நிலையில் நேற்று முன்தினம் பிற்­பகல் 3.00 மணி­யாகும் போது குறித்த கடற்­படை வீரர் உயி­ரி­ழந்­துள்ளார்.

 இத­னி­டையே இலங்கை கடற்­படை வீரரின் மரணம் எவ்­வாறு நிகழ்ந்­ததுஇ அதற்­கான காரணம் என்ன, பயிற்­சி­களில் ஏதும் சிக்­கல்கள் உள்­ள­னவா? என்­பது குறித்து பூர­ண­மாக வெளிப்­ப­டுத்த இந்­திய கடற்­படை விசேட விசா­ரணை ஒன்­றினை ஆரம்­பித்­துள்­ளது. இந்த விசா­ர­ணை­க­ளுக்கு என சிறப்பு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் இன்று நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53