இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வியாபார முயற்சியாளர்களுக்கான UTE  மற்றும் HNB ன் பலம் இணைந்த ஆதரவு - வளர்ந்து வரும் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

26 Apr, 2017 | 10:33 AM
image

 

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் அடங்கலாக,  நாட்டின் இளைஞர்களின் வியாபாரங்களை ஊக்குவிப்பதற்கு தங்கியிருக்கக்கூடிய மற்றும் வினைத்திறன் வாய்ந்த சாதனங்கள் மற்றும் நிதி உதவி போன்றன அதிகளவு தேவையாக அமைந்துள்ளன. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் போட்டிகரத்தன்மை வாய்ந்தவர்களாக அமைந்திருப்பதை உறுதி செய்யும் வகையில் வலு வினைத்திறன் வாய்ந்த சாதனங்களை பெற்றுக்கொடுப்பதற்கு யுனைட்டட் ட்ராக்டர் அன்ட் எக்யுப்மன்ட் (பிரைவட்) லிமிட்டெட் (UTE ) மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி (HNB) ஆகியன புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இதனூடாக சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு தவணை முறைக் கொடுப்பனவில் FS Curtis Air Compressor  தெரிவுகளை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் காணப்படும் முன்னணி தனியார் துறை வணிக வங்கியான ஹற்றன் நஷனல் வங்கி, 2012 மற்றும் 2013ல் நாட்டின் சிறந்த வங்கியாக பிரித்தானியாவின பாங்கர் சஞ்சிகையினால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக 9வது வருடமாக சிறந்த சில்லறை வங்கியாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், ஏசியன் பாங்கர் மகசின் மூலமாக இலங்கையில் காணப்படும் சிறந்த நுண் நிதியியல் தீர்வை வழங்கும் வங்கியாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஹற்றன் நஷனல் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரியான தில்ஷான் ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், “சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர் துறைக்கு உதவிகளை வழங்குவது பற்றிய எமது தீர்மானம் என்பது, தங்கியிருக்கும் தன்மை மற்றும் வினைத்திறன் வாய்ந்த தயாரிப்புகளை வழங்கும் UTE  ன் தெரிவுகளுக்காக தவணை முறை கொடுப்பனவு வழங்கல் எமது வாடிக்கையாளர்களுக்கு பெரும் நன்மையான தீர்வாக அமைந்திருக்கும் என்பதுடன், அவர்களுக்கு உற்பத்தித்திறன் மற்றும் இலாபத்திறனை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும். இது அனைவருக்கும் வெற்றியளிக்கும் தீர்வாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகளின் பிரகாரம், FS Curtis Air Compressor  களை கொள்வனவு செய்வதற்கு HNBஇனால் கவர்ச்சிகரமான நிதித் தீர்வு சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படும். இந்த நியதிகளில், ஐந்து ஆண்டுகள் வரை மீள செலுத்தக்கூடிய திட்டம் அமைந்துள்ளதுடன், போட்டிகரத்தன்மை வாய்ந்த நிலையான வட்டி வீதம் அல்லது வாடிக்கையாளரின் வருமானத்தை பொறுத்து மாற்றமடையும் வட்டி வீதம் அமைந்துள்ளது. சிறந்த வாடிக்கையாளர் சௌகரியத்தை வழங்கும் வகையில், ஆகக்குறைந்த ஆவணங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு லீசிங் வசதிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளும்HNB இனால் வழங்கப்படுகிறது.

FS Curtis தெரிவு என்பது, உலகப் புகழ்பெற்ற பொறியியல் வடிவமைப்பைக் கொண்டுள்ளன. நீடித்த உழைப்பு மற்றும் வினைத்திறன் ஆகியவற்றில் ஒப்பற்றதாக இந்த சாதனம் அமைந்துள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலமாக, உள்நாட்டு சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு FS Curtis  தயாரிப்புகளான Air Dryer, Air Filter, Air Receiver, Piston Air Compressor  மற்றும் Rotary Screw Compressor  போன்றவற்றை மாதாந்த தவணைக் கொடுப்பனவில் கொள்வனவு செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும். 

UTE ன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாத் இஸ்மைல் கருத்துத் தெரிவிக்கையில், “HNB உடன் UTE  கைகோர்த்துள்ளமையையிட்டு மிகவும் பெருமை கொள்வதுடன், இளைஞர்களுக்கு ஊக்குவிப்பை வழங்கி, நாட்டின் அபிவிருத்திக்கும் தொடர்ச்சியான பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளோம். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலமாக, நாட்டின் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு வியாபார சவால்களை பரிபூரண நிதித் தீர்வுகளுடன் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிவதுடன், தமது நாளாந்த செயற்பாடுகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடியதாகவும் அமைந்திருக்கும்” என்றார். 

FS Curtis தெரிவுகளின் அனுகூலங்களை பிரபல்யப்படுத்துவதற்காக UTE  இனால் நாடு முழுவதையும் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை சென்றடைந்து அவர்களுக்கென வீதியோர பிரச்சார செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் போது அதிகளவு air compressor களை பயன்படுத்தும் கராஜ்கள், டயர் விற்பனை நிலையங்கள், சேவை நிலையங்கள் மற்றும் சிறிய தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு அதிகளவு கவனம் செலுத்தப்படுகிறது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ், விசேட லீசிங் திட்டத்தின் கீழ், சாதனங்களை கொள்வனவு செய்ய முனையும் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு HNB  இனால் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய நிதித் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58