இக்குழுவின் தீர்மானங்களுக்கமையவே எதிர்காலத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சு மேலும் தகவல் தருகையில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி, மீன்பிடித்த இந்திய மீனவர்களின் 132 க்கு மேற்பட்ட படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றை விடுவிப்பதற்கு வடபகுதி மீனவ சமாஜங்களும் மீனவர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்தியப் படகுகள் விடுவிக்கப்பட்டால் மீண்டும் கடல் எல்லை மீறப்படும். எனவே எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கும் வடபகுதி மீனவர்கள் படகுகளை விடுவிப்பதை கடுமையாக எதிர்க்கின்றனர். 

எனவே இப் பிரச்சினையைக் கையாள்வதற்காக வடபகுதி மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், அமைச்சின் அதிகாரிகள் உள்ளடக்கப்பட்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு கூடி, இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளது.