மீத்தொட்டமுல்லையில் வீடுகளை இழந்த மற்றுமொரு தொகுதியினருக்கு புதிய வீடுகள்...!

Published By: Robert

26 Apr, 2017 | 08:56 AM
image

மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிந்ததன் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் முழுமையாக பாதிக்கப்பட்ட 65 வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

முதலாவது கட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்த 30 குடும்பங்களுக்கு அண்மையில் வீடுகள் வழங்கப்பட்டன.

இந்த வீடுகளுக்காக அரசாங்கம் 3920 இலட்ச ரூபாவை செலவிட்டுள்ளது.

மேலும் இந்த வீட்டுரிமையாளர்களுக்கு வீட்டுத் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக வீட்டுரிமையாளர் ஒருவருக்கு தலா இரண்டரை இலட்ச ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.

இழந்த வீடுகளுக்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் முடிவடைந்ததன் பின்னர் பெறுமதிகூடிய வீடுகளுக்கு மேலதிகமாக நிதியை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41