(ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட நொச்சிமுனை 171ஏ கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் மீள்குடியேற்ற தாழ்நிலப்பகுதி மக்கள் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள அபாயம் காரணமாக தங்களுடைய வசிப்பிடங்களைவிட்டு வெளியேறி வருகின்றனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பாகங்கள் நீரினால் மூழ்கியுள்ளது. இதனால், நொச்சிமுணை பகுதின் தாழ்நிலங்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதனால் அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துவருவதாகவும் தெரியவருகின்றது.


முறையான வடிகான் மற்றும்  வீதிப்போக்குவரத்து வசதிகளை செய்து தருமாறு  சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிகை விடுத்து பிரதேச மக்கள்  வெள்ள நீருக்குள் நின்று அப்பகுதி மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.


அப்பகுதி மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக 171ஏ கிராம சேவகர் ஆர்.கோகுலதாஸ் அவ்விடத்துக்கு விஜயம் மேற்கொண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டதுடன்இ மக்களின் பிரச்சனைகளையும் கேட்டறிந்து அதற்கான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.


அத்துடன் குறித்த  இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மகஜரை 171ஏ கிராம சேவகர் ஆர்.கோகுலதாஸிடம் வெள்ளத்தினால் பாதிக்கப்ட்ட மக்கள் வழங்கினர்.