உள்ளடக்கமான மற்றும் சமாதானமான சமூகங்களை முன்னிறுத்தவும் பிராந்தியத்தில் உச்சக்கட்ட வன்முறையை எதிர்கொள்வதற்கு தமது வகிபாகங்களை கலந்துரையாடுவதற்கு ஆசிய-பசுபிக் நாடுகளைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் கூடியுள்ளனர்.

அண்மைய வருடங்களில் உலகம் முழுவதிலும் சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் நிலைபேற்றுத் தன்மையை அச்சுறுத்தும் வகையில் வன்முறையான அடிப்படைவாதத்தின் புதிய அலைகளை உலகம் எதிர்கொண்டு வருகின்றது. ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்புக்கான அதிகரிக்கும் அக்கறையாக இது உள்ளது.

உச்சக்கட்ட வன்முறையை எதிர்கொள்வதற்கான வினைத்திறன் மிக்க ஒரு வகிபாகத்தினை ஆற்றக் கூடிய பிரதான நிறுவனங்களின் மத்தியில் பாராளுமன்றங்கள் உள்ளன. சர்வதேச சாசனங்கள் மற்றும் தீர்மானங்களை ஏற்புறுதி செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்தலுக்கு மேலதிகமாக தேசிய கொள்கைகளுக்கான வரைபுநகலைத் தரக் கூடிய சட்டங்கள் மற்றும் அவற்றை உள்வாங்குவது தொடர்பில் பாராளுமன்றங்கள் ஆர்வமாக உள்ளன. 

இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் நாட்டின் இளைஞர்களுடன் நெருக்கமான பிரதிநிதிகள் என்ற வகையில் ஆற்றுவதற்கான மிகவும் முக்கியமான வகிபாகம் அவர்களுக்கு உண்டு.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்றங்களில் இளையோர் பங்களிப்பினை முன்றிறுத்துவதற்கு இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிபுணர்கள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் ஆகியோரை ஒரு இடத்தில் கூட்டுவதற்கு பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் (IPU), இலங்கை பாராளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP) என்பன ஒன்றிணைந்துள்ளனர்.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தின் சபாநாயகர்  கரு ஜயசூரிய, பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் தலைவர் சபீர் சௌத்ரி மற்றும் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளரும் இலங்கைக்கான  UNDP இன் வதிவிட பிரதிநிதியுமான உனா மெக்கோலே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது உரையாற்றிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய,

“உலகில் நடைபெறும் உச்சக்கட்ட வன்முறையின் காரணமாக இந்நிகழ்வின் தலைப்பு மிகவும் பொருத்தமானது. இன்று உச்சக்கட்ட வன்முறையானது பொருளாதார வாய்ப்பு, கல்வி, இன மத பாகுபாடு மற்றும் அரசியல் காரணங்களினால் நடைபெறுகின்றது” என கூறினார்.

“சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க இளையோருக்கு சாத்தியம் உண்டு. எமது பணியின் ஊடாக, இளையோர் இன்று மேலும் ஆக்கத்திறன் மிக்கவர்களாக உள்ளனர், அதிக தகவலறிந்தவர்களாக உள்ளனர் மற்றும் முந்தைய தலைமுறைகளை விட வசப்படுத்தக்கூடியவர்களாக உள்ளனர் என்பதனை நாம் தொடர்ந்தும் நினைவூட்டப்படுகின்றோம உச்சக்கட்ட வன்முறையை எதிர்கொள்வதற்கு நாடக் கூடிய எந்தவொரு முழுமையான அணுகுமுறையிலும் நாம் அவர்களை உள்ளடக்க வேண்டும்” என ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளரும் இலங்கைக்கான UNDP இன் வதிவிட பிரதிநிதியுமான உனா மெக்கோலே தெரிவித்தார்.

கடந்த வருடம் வெளியான இன் ஆசிய-பசுபிக் பிராந்திய மனித அபிவிருத்தி அறிக்கைக்கு அமைய, உலகின் இளைஞர்களில் அரைப்பங்கிற்கும் அதிகமானோர் ஆசியாவில் வசிக்கின்றனர். அத்துடன் பிராந்தியத்தில் உள்ளவர்களில் ஒரு பில்லியனுக்கும் அதிகாமானோர் 25 வயதுக்கு குறைந்தவர்களாவர்.

இளம் ஆசியர்கள், எவ்வாறாயினும், பாராளுமன்றங்கள் உள்ளடங்கலாக அரசியல் நிறுவனங்களில் பங்குபற்றுவதற்கு சிறு சந்தர்ப்பங்களையே காண்கின்றனர்.

“உச்சக்கட்ட வன்முறையை எதிர்கொள்வதற்;கு வினைத்திறன் மிக்க வகையில் பங்குபற்றுவதற்கு முறைசார் அரசியல் செயற்பாட்டில் இளைஞர்கள் உறுதியாக பங்கேற்க வேண்டும். பாராளுமன்றத்தில் இளைஞர்களின் பங்குபற்றலை மற்றும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் என்பது அடிப்படைவாதத்தை அடையாளப்படுத்துவதற்கு இளைஞர்களின் திறமைகளிற்கு மற்றும் அதன் சமூக-பொருளாதார ஊக்கிகளுக்கு அத்திவாரம் அளிப்பதற்குமான வழியாகும்” என பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் தலைவர்  சபீர் சௌத்ரி தெரிவித்தார்.

தேசிய பாராளுமன்றங்களில் இளைஞர் பங்களிப்பு தொடர்பான 2016 ஆம் ஆண்டுக்கான அறிக்கையானது பிராந்தியத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களில் சுமார் ஒரு வீதமானோர் 30 வயதுக்கு குறைந்தவர்கள் என வெளிப்படுத்தியது. உலகளாவிய ரீதியில்ரூபவ் உலக பாராளுமன்ற உறுப்பினர்களின் இரண்டு வீதத்திற்கும் குறைவானவர்களே 30 வயதுக்கு குறைந்தவர்களாகும்.

இளையோர் மற்றும் உரிமைகளற்ற ஏனையோர்களின் கருத்தியல், ஆக்கத்திறன் மற்றும் சக்தியினை கட்டுப்படுத்தி பயன்படுத்தவில்லையெனின் நாம் வெற்றி பெறமாட்டோம் என அங்கீகரிக்கும் வகையில் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வன்முறையான அடிப்படைவாதத்தை தடுப்பதற்கான ஐ.நாவின் நடவடிக்கை திட்டம் உள்வாங்கப்பட்டது.