ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் ஏனைய சந்தேகபர்களையும் கைது செய்யுமாறு உத்தரவு !!

Published By: Robert

25 Apr, 2017 | 01:03 PM
image

ஊடகவியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் மந்தகதியில் செயற்படுகின்றனரா? என்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் மன்றில் பொலிஸாரிடம் கேவியெழுப்பியுள்ளார். 

கல்குடாவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்ய வேண்டிய ஏனைய சந்தேகபர்களையும் கைது செய்யுமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற சுதந்திர ஊடகவியலாளர் சசிகரன் மற்றும் நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்கள்  நித்தியானந்தன் ஆகியோர் மீதே கும்புறுமுலை வேம்பு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பிலான வழக்கு வாழைசேனை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டிருந்த ஆறுமுகம் தம்பிதுரை, ஆறுமுகம் ஜெயகாந்த் ஆகிய இரண்டு சந்தேகநபர்களும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டில் 5 சந்தேகநபர்களுக்கு மேற்பட்டவர்கள் இந்த தாக்குதலுடன் தொடர்புப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாமைக்கான காரணம் என்னவென நீதிபதி பொலிஸாரிடம் வினவியுள்ளார்.

குற்றச் செயல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை குற்றமற்றவர்கள் என பொலிஸார் எவ்வாறு தீர்மானிக்க முடியும் என வினவிய நீதிபதி அதற்காகவே நீதிமன்றம் உள்ளதாவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்களை, இரண்டு சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்ததாகவும், ஒருவர் கம்பியால் தாக்கியதாகவும், மற்றுமொருவர் அவர்களை மறிக்க முயன்றதாகவும், சிலரை தாக்குதலுக்காக சந்தேகநபர்கள் அழைத்ததாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஊடக பிரசித்திக்காகவே இந்த முறைப்பாட்டினை ஊடகவியலாளர்கள் தாக்கல் செய்துள்ளதாக பொலிஸார் இதன்போது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அந்த விடயம் தனக்கு அநாவசியமானது என தெரிவித்த நீதிபதி, வீதியில் செல்வோர் மீது தாக்குதல் நடத்த காவலருக்கு என்ன அதிகாரமுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணை அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி, சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறை பொலிஸாருக்கு தெரியாதா எனவும் வினவியுள்ளார்.

இந்த விசாரணைகளை பொலிஸார் முறையாக நடத்தவில்லை என்பது புலப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

வழக்கு தொடர்பில் கைது செய்ய வேண்டிய எவரேனும் இருந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இதன்போது நீதிபதி ஏ.சி.றிஸ்வான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணி ரி.பிறேம்நாத் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31