இலங்கைக்கான சீசெல்ஸ் குடியரசின் தூதுவர் மற்றும் இலங்கை கடற்படை தளபதி ஆகியோருக்கிடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பு இலங்கை கடற்படை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான சீசெல்ஸ் குடியரசின் தூதுவர் டேவிட் க்ளுட் பியர் மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல்  ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோருக்கிடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பில், பல விடயங்கள் ஆராயப்பட்டதாகவும் இரு தரப்பு பரஸ்பர நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டடுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவரும் மரியாதை நிமித்தமான சந்திப்பின் நிறைவில் நினைவுப் பரிசுப்பொருட்களை பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.