ஹெரோயின் போதைப்பொருளை கடத்திவந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து விமானத்தின் மூலம் இலங்கைக்கு வந்த 40 வயதுடைய பாகிஸ்தான் பிரஜையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார்.

708 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மிகவும் சூட்சுமமான முறையில் தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டுவரும் போதே இன்று அதிகாலை 12.45 மணியளவில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 7 மில்லியன் ரூபாவென தெரிவிக்கும் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.