(க.கமலநாதன்)

அரச வளங்களை விற்பனை செய்வதையே தற்போதைய அரசாங்கம் தமது பொருளாதார கொள்கையாக கொண்டுள்ளது. எனவே அந்த திட்டத்தினை தோற்கடிப்பதற்கான முன்னெடுப்பாக அமைந்துள்ள பெற்றோலி கூட்டுதாபன ஊழியர்களி போராட்டம் நியாமாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஊழியர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து இவர்களின் வேலை நிறுத்தினால் மக்கள் எதிர்கொள்ளும் அசெளகரியங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி நேற்றைய தினம் பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தொழிலாளர்கள் மேற்கொள்ளும் வேலை நிறுத்திற்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேற்படி போராட்டத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்குவதோடு அவர்களின் கோரிக்கைக்கு நியாயமான முடிவுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கும். தற்போதைய அரசாங்கம் நாட்டின் பெறுமதிமிக்க சொத்துக்களை விற்பனை செய்வதையே தமது பொருளாதார கொள்கையாக கொண்டுள்ளது.

இதனால் நாட்டினுல் வரவேண்டிய மிகப்பெரும் அளவிளான இலாபமும் கை நலுவிச் செல்கின்றது. அதனால் தற்போதைய அரசாங்கத்தின் நாட்டு வளங்களை விற்பனை  செய்யும் திட்டங்களை தோற்றகடிக்க வேண்டும். அதனால் தான் கூட்டுத்தாபனத்தின தொழிலாளர்களின் போராட்டம் நியாயமனது என்கின்றோம்.

அதனால் அவர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வேலை நிறுத்தினால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசொகரியங்களையும் குறைக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.