விமல் வீரவங்சவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு..!

Published By: Robert

24 Apr, 2017 | 01:35 PM
image

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உட்பட 7 பேருக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று உத்தரவிட்டுள்ளார்.

Image result for விமல் வீரவங்ச virakesari

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, மாகாண சபை உறுப்பினர் ரொஜர் செனவிரட்ன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸமில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க, சந்திம ஜயலால் ஆகியோர் வழக்கில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 

கடந்த வருடம் பெப்ரவரி 6ஆம் திகதி கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு எதிரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹ_சைனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திருந்தனர்.

இதனால், ஹெவ்லொக் வீதி மற்றும் பௌத்தாலோக்க மாவத்தை ஆகிய வீதிகளில் போக்குவரத்துக்கு தடையேற்படுத்தியதால், பொதுமக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 7வது சந்தேக நபரை கண்டுபிடிக்க முடியாதுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

குறித்த  சந்தேக நபரையும் தேடி கண்டுபிடித்து வழக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56