தென்கொரியாவில் தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்களுக்கான கொரிய மொழி திறன்விருத்தி எழுத்துப்பரீட்சை எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த பரீட்சை இல. 205, தெபானம, பன்னிபிட்டியவில் அமைந்துள்ள கொரிய களனி மத்திய நிலையத்தில் தொடர்ந்து 4 மாதங்கள் நடைபெறும்.

இந்த பரீட்சையில் 22888 இளைஞர் யுவதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்களிலிருந்து 16431 பேர் உற்பத்தித்துறை சம்பந்தமான பரீட்சைக்கும் 6457 பேர் கடற்றொழில் துறை பரீட்சைக்கும் தோற்றவுள்ளனர். 

இம்முறை பரீட்சைகள் கணனியூடாகவே நடைபெறவுள்ளதாகவும் பரீட்சைக்கான திகதி நேரம் மற்றும் பரீட்சை நிலையம் குறித்த மேலதிக விபரங்களை www.slbfe.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.