பாம்பு என்றால் படையும் நடங்கும். ஆனால் பெண் ஒருவர் பாம்புக்கு முத்தக் கொடுக்க போய் அது கடித்த  வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

சீனாவின் பூகெட் மாகாணத்தில் சுற்றுலாபயணிகளை கவர கடந்த சனிக்கிழமை ஒரு நிறுவனம் ஒன்று மலைப்பாம்பை வைத்து நிகழ்ச்சி நடத்தியது.

 அப்போது அங்கு வந்திருந்த பார்வையாளர்களில் ஜின் ஜிங் என்ற பெண் 2 நபர்கள் பிடித்து வைத்திருந்த மலைப்பாம்பின் தலையில் முத்த மிட முயன்றார்.

 பாம்பு திடீர் என அவரது மூக்கை கவ்வி பிடித்து கொண்டது பின்னர்  ஒரு வழியாக சிரமபட்டு அவரை விடுவித்து அருகில் உள்ள வைத்தியசாலையில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு வாயில் 8 தையல்கள் போடப்பட்டது.

இது குறித்த வீடியோ யுடியூபில் வெளியானதும் பொலிசார் அங்கு சென்று பாம்பு நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு நிகழ்ச்சியை நடாத்த தடை விதித்துள்ளனர்.