ஐ.பி.எல். தொடரில் படுமோசமான சாதனையை நிகழ்த்திய பெங்களூர் : ரசிகர்களுக்கு அதிர்ச்சி! (காணொளி இணைப்பு)

Published By: Ponmalar

24 Apr, 2017 | 09:17 AM
image

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி மோசமான சாதனையொன்றினை நிகழ்த்தி, படுதோல்வியடைந்தது.

பெங்களூர் அணி நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தபடிய கொல்கத்தா அணி 131 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 9.4 பந்து ஓவர்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து 49 ஓட்டங்களை மாத்திரமே பெற்று படுதோல்வியடைந்தது.

பெங்களூர் அணியின் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் கூட இரட்டை இலக்க ஓட்டங்களை பெறவில்லை. பெங்களூர் அணி சார்பில் அதிகபட்சமாக ஜாதவ் 9 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

குறித்த 49 என்ற ஓட்ட எண்ணிக்கையானது ஐ.பி.எல். வரலாற்றில் அணியொன்று பெற்றுக்கொண்ட மிக குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ராஜஸ்தான் ரோயல் அணி 2009 ஆம் ஆண்டு 58 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமையே மிக குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியிருந்தது.

பெங்களூர் அணியில் மிக சிறந்த துடுப்பாட்ட வீரர்களான கெயில், வில்லியர்ஸ் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் இருந்தும் 49 ஓட்டங்களுக்கு அந்த அணி சுருண்டிருப்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை உண்டு பண்ணியுள்ளது.

இந்த போட்டியில் கொல்கத்த அணியின் சார்பாக சிறப்பாக பந்துவீசிய (3 விக்கட்டுகள்) கார்ல்டன் நெயில் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவுசெய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35