ரஷ்யாவின் தெற்கு பகுதி நகரமான பேல்கொராத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் நோயாளி ஒருவர் தாதியிடம் தவறாக நடந்துக்கொள்ள முயன்ற நிலையில் குறித்த நோயாளியை வைத்தியர் ஒருவர் தாக்கி  கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 29 ஆம் திகதி 59 வயதான எவ்கேனி பாக்தின் என்ற நோயாளி சிகிச்சை பெருவதற்கான வைத்தியச்சாலை சென்ற போது அங்கு அவருக்கு சிகிச்சையளிக்க வந்த தாதியுடன் சில்மிஷத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.

இதையடுத்து அந்த தாதி, வைத்தியர் செலிண்டினோவ்விடம் முறையிட்டுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த வைத்தியர்;, நோயாளியை கடுமையாகத் தாக்கினார். இதை பார்த்த நோயாளியுடன் வந்த நபர், வைத்தியரை தடுக்க முயன்றாலும் வைத்தியர் அந்த நபரையும் தாக்கி கீழே தள்ளி உதைத்தார். இதனால் அங்கு இருந்த மற்றைய வைத்தியர்களும் தாதிகளும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

வைத்தியரின் கடுமையான தாக்குதலுக்குள்ளாகிய நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றது. இந்தக் கொலையை அடுத்து வைத்தியர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.