(ஆர்.ராம்)

மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரிடத்தில் உள்ள முள்ளிக்குளம் உட்பட வடமாகாணத்தில் படைத்தரப்பினர் ஆக்கிரமித்துள்ள காணிகள் விடுவிப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சில் நாளை முக்கிய கூட்டம் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.