`விஜய் 61' படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

23 Apr, 2017 | 11:03 AM
image

அட்லி இயக்கும் `விஜய் 61' படத்தின் பர்ஸ்ட் லுக், பாடல் வெளியீடு, படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

விஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முக்கிய தளங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பிரம்மாண்டமான பல அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கிய நடிகர், நடிகையர் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் முக்கியமான பல காட்சிகள் ஐரோப்பாவில் படமாக்கப்படவுள்ளன.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இயக்குநரும், நருகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

`இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 

இப்படத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுவதால், இப்படத்திற்கு `மூன்று முகம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு என்ன? பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல் வெளியீட்டு விழா மற்றும் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது உள்ளிட்ட தகவல்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அதன்படி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் பிறந்தநதளான ஜுன் 22 ஆம் திகதி வெளியிட்டு, அவரது ரசிகர்களுக்கு விருந்து படைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. 

அதைத் தொடர்ந்து படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடத்த ஆயத்த வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. படத்தை வருகிற அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியாகவிருந்த ரஜினியின் `2.0' ஜனவரி மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. எனவே `விஜய் 61' படம் தீபாவளி விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35