தமிழ் திரையுலக பழம்பெரும் இயக்குனரான கே.எஸ். கோபாலகிருஷ்ணன் (86) உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார். கும்பகோணத்தில் பிறந்த கோபாலகிருஷ்ணன், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட 70 படங்களை இயக்கியுள்ளார்.

கோபாலகிருஷ்ணன் பாடலாசிரியர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். 


கே.எஸ்.ஜி என திரையுலகினரால் அழைக்கப்பட்ட கே. எஸ். கோபாலகிருஷ்ணன் 1950 ஆம் ஆண்டுகளில் திரையுலகில் பாடல்கள் எழுதிப் பின்னர் 1980ஆம் ஆண்டுகளின் துவக்கம் வரையிலும் பாடலாசிரியர்இ திரைக்கதை எழுத்தாளர்இ தயாரிப்பாளர் என தமிழ்த் திரையுலகில் புகழ் பெற்று விளங்கினார்.


இவர் எழுதி இயக்கிய சாரதா(1962) சிறந்த படமாக தேசிய விருது பெற்றது.  கை கொடுத்த தெய்வம் படத்திற்காக மத்திய அரசின் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். 1975 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வாங்கியுள்ளார். 1992 இல் விஜயகாந்த் பானுப்பிரியாவின் காவியத் தலைவன் அவரது கதை வசனத்தின் இறுதி படம் ஆகும்.