தங்கொடுவ பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளதாக தங்கொடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் இன்று காலை தொழிற்சாலையில் இருந்த இயந்திரமொன்றை பொருத்திக்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் வரகாபொல, கலிபிமட பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்ததுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.