“உணவை“ கருப்பொருளாக வைத்து “தமிழர் பாரம்பரிய உணவும் ஆரோக்கியமும்” என்ற தொனிப்பொருளில் சிங்கப்பூர் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் 17 ஆவது ஆண்டாக  தமிழ் மொழி விழாவொன்று கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி மாலை சிங்கப்பூரிலுள்ள உமறுப்புலவர் அரங்கில் இடம்பெற்றது.

மறந்திருக்கக்கூடிய தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுக்கவேண்டும் பலரைப் பாதித்துவரும் பல நோய்கள் எமது சமூகத்தில் மீண்டும் மீண்டும் தலைதூக்கவிடாமல் தடுக்க எமது பாரம்பரிய உணவுகள் உதவக்கூடும். போன்ற சிந்தனைகள் தமிழ்மொழி விழாவில் வலியுறுத்தப்பட்டன.

 

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.  அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பாரம்பரிய உணவுவகைகளின் நன்மைகள் பற்றி குறித்த தமிழ் மொழி விழாவில் எடுத்துச்சொல்லப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய உணவுவகைகள் மிகச் சிறப்பாக அலசப்பட்டன. குறிப்பாகக் கொள்ளுஇ எள்இ மஞ்சள்இ சிறுதானியங்கள் ஆகியவற்றைப் பற்றி மிகச் சிறப்பாகப் பேசப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சிவராமன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் பங்கெடுப்பது இது நான்காவது தடவையாகும். மாணவர்களிடையே மொழி ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்இ பண்பாடு தொன்மையை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக  உயர்தர பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்ச்சி இடம்பெற்றது.

ஆரம்பக் கல்லூரி மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழ்மொழி விழா 2017 இல் உயர் தர பாடசாலை மாணவர்களையும் ஆரம்பக் கல்லூரி மாணவர்களையும் பங்கெடுக்க வைப்பதென்று முடிவு செய்தது செயற்குழு.

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டு அவர்கள் அந்த தலைப்பை வைத்து ஆய்வு செய்து படைப்புக்களை படைக்க வேண்டும். மாணவர்களின் ஆய்வின் ஆழம்இ குரல் வளம்இ படைக்கும் திறன்இ பார்வையாளர்களை தொடர்பு படுத்தும் திறன் போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டு வெற்றியாளர்கள் இந்த தமிழ் மொழி விழாவுக்கு தெரிவு செய்ய படுகிறார்கள்.

இந்நிலையில் மாணவர்கள் தெரிவுசெய்யும் அதே தலைப்பையொட்டி அந்த தலைப்பில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சிறப்பு பேச்சாளர் சிறப்புரை ஆற்றுவார்.

இவ்வாண்டு “உணவை“ கருப்பொருளாக வைத்து தமிழர் பாரம்பரிய உணவும் ஆரோக்கியமும்” என்ற தலைப்பினை மாணவர்கள் படைப்புக்காகவும் “தமிழ் உணவுக்கும் அமுதென்று பெயர்” என்ற தலைப்பினை சிறப்பு பேச்சாளர் மருத்துவர் கு. சிவராமனுக்கு கொடுக்கப்பட்டது.

மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவருகிறது. இந்த ஆண்டு முன் இறுதிச்சுற்றில் 60 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வினை படைத்தமை சிறப்புக்குரியதாகும். பெற்றோர்களும்இ பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை பறைசாற்றுவதாகவே இந்நிகழ்வு அமைந்தது .

இந்நிகழ்வில் இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட உயர் நிலை பள்ளி மாணவர்கள் இருவரும் ஆரம்பக் கல்லூரி மாணவர்கள் இருவரும் தங்கள் ஆய்வினை சிறப்பாக படைத்தனர். அதில் தமிழர்கள் அதிகம் பயன்படுத்திய எள்இ மஞ்சள்இ மிளகு போன்ற பல பொருட்களின் முக்கியத்துவத்தை தற்கால வாழ்க்கை முறைக்கேற்றவாறு உதாரணங்களுடன் விளக்கினார்.

இந்த போட்டியில் இந்திய அனைத்துலக பாடசாலையின் மாணவிகளாகிய வைஷ்ணவி ஹரிஹர வெங்கடேசன் ஆகியோர் உயர்நிலை பிரிவிலும் செயிண்ட் ஆண்ட்ருஸ் ஆரம்பக் கல்லூரியைச் சார்ந்த மீனலோச்சனி முத்துக்குமார் மற்றும் சிம்மரோஷினி மகேந்திரன் ஆகியோர் தொடக்கல்லூரி பிரிவிலும் முதல் பரிசைப் பெற்றனர்.

சிறப்புரை ஆற்றிய மருத்துவர் கு.சிவராமன்இ தமிழர் பாரம்பரிய உணவின் சிறப்பையும் சிறந்த உணவு வகைகளையும் உணவு பழக்கங்களையும் எடுத்து கூறியதோடு உணவு தொடர்பாக உலக அளவில் நடத்த ஆய்வுகளையும் அந்த ஆய்வுகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் தமிழர்களின் உணவுமுறை சிறந்து விளங்குவதையும் எளிமையாக விளக்கினார்.

மேலும் தமிழர்களின் உணவுமுறை சாதாரணமாக தோன்றியது அல்லஇ அது பல ஆயிரம் ஆண்டுகளின் அறிவியல் என்றும் மருத்துவர்.கு சிவராமன் தெரிவித்தார்.

விழாவில் வளர் தமிழ் இயக்கத்தின் தலைவர் ராஜாராம் உட்பட பல தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களும் ஆசிரியர்கள்இ மாணவர்கள்இ பெற்றோர்கள்இ தமிழ் ஆர்வலர்கள்இ அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தார் என 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.