தமிழர் தரப்பை தொடர்ந்தும் நிராகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது 

21 Apr, 2017 | 09:17 PM
image

(ஆர்.யசி)

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் சகல மக்களின் பிரதிநிதித்துவமும் பலமடையும் வகையில் பிரதான இரண்டு கட்சிகளும் செயற்பட வேண்டும். தமிழர் தரப்பை தொடர்ந்தும் நிராகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் நிலைப்பாட்டை ஆராய்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயற்பட வேண்டும் எனவும் அக்கட்சி தெரிவித்தது.

 

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் சிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகள் சந்திப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளது என வினவியபோதே கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

நாட்டின் தேசிய பிரச்சினைகளை சரியான வகையில் கையாள வேண்டும். எனினும் பிரதான இரண்டு கட்சிகளும் தனித்தனியாக ஆட்சியை நடத்திய போதிலும் அதேபோல் இப்பொது இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டு ஆட்சியை முன்னெடுத்து வரும் நிலையிலும் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்று இன்னும் எட்டப்படவில்லை. 

அவ்வாறு இருக்கையில் இப்போது புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் நீண்டகால தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்படுவது வரவேற்க்கத்தக்க ஒன்றாகும். ஆனால் அவ்வாறு உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பு நாட்டின் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்கக் கூடிய வகையில் அமையப்பெற வேண்டும். மாறாக பிரச்சினைகளை பெரிதாக்கி மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08