மலேசியாவில் இடம்பெற்ற ஜொலி பாஷ் இன்ரநெஷனல் பினாக் 2017 க்கான  6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஜீ.பி.எல். யாழ்ப்பாண அணி  25 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய ஜொலி ஸ்டார் அணியை வெற்றிகொண்டு சம்பியன் ஆனது.

இந்நிலையில் ஜொலி பாஷ் இன்டநெஷனலினால் நடத்தப்பட்ட இருபதுக்கு -20 ஓவர் கிரிக்கெட் போட்டியில்  ஜீ.பி.எல். ஆசிய அணி 61 ஓட்டங்களால் ஜொலி ஸ்டார் நெஷனல் அணியை தோற்கடித்து சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

அணிக்கு 7 பேர் பங்கு பற்றிய ஜொலி பாஷ் இன்டநெஷனல் பினாக் -2017 கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் மலோசியாவில் உள்ள கிரிக்கெட் அரங்கில் இடம்பெற்றது.

இம் முதல் முறையாக இடம்பெற்ற இத் தொடரில் 4 அணிகள் பங்குபற்றின. அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா மற்றும் ஜீ.பி.எல். யாழ்ப்பாண அணிகள் பங்குபற்றின.

இப் போட்டித் தொடரின் இருவகையான போட்டிகளுக்கும் அவுஸ்திரேலிய ஜெலி ஸ்டார் அணியும் ஜீ.பி.எல். யாழ்ப்பாண அணியும் இறுதிப் போட்டிக்கு  தெரிவாகியிருந்தன.

ஜொலி பாஷ் இன்டநெஷனல் பினாக் 2017 க்கான  6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஜீ.பி.எல். யாழ்ப்பாண அணி  25 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய ஜொலி ஸ்டார் அணியை வெற்றிகொண்டது.

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக அரியாலை மண்ணின் மைந்தன் ஏ.சன்சஜனும் சிறந்த துடுப்பாட்ட வீரராக கஜநாத்தும் சிறந்த பந்துவீச்சாளராக சஜந்தனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற இருபதுக்கு -20 போட்டியில் ஜீ.பி.எல். ஆசிய அணி 61 ஓட்டங்களால் ஜொலி ஸ்டார் நெஷனல் அணியை தோற்கடித்து சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

இருபதுக்கு - 20 போட்டியின் ஆட்டநாயகனாக அரியாலை மண்ணின் மைந்தன் ஏ.சன்சஜன் தெரிவுசெய்யப்பட்டார்.