நடிகர் சத்யராஜ் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டதையடுத்து கர்நாடகாவில் பாகுபலி 2ம் பாகம் வெளியிடுவதில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கியது.

காவிரி நதி நீர் பிரச்சினையில் தமிழகம், கர்நாடகா ஆகிய மானிலங்களுக்கிடையில் கடந்த பல ஆண்டுகளாகவே முறுகல் நிலை தோன்றியுள்ளது. ஏறக்குறைய ஒரு தசாப்தத்துக்கு முன் காவிரி பிரச்சினையில் கர்நாடகாவைக் கண்டித்து தமிழ் திரையுலகினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ், கடுமையான வார்த்தைகளால் கர்நாடகாவின் போக்கைக் கண்டித்துப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், சத்யராஜ் முக்கிய வேடம் ஏற்றிருக்கும் பாகுபலி இரண்டாம் பாகத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என கர்நாடக அமைப்பு ஒன்று போர்க்கொடி தூக்கியது. பட இயக்குனர் ராஜமௌலி சார்பில் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டபோதும், சத்யராஜ் மன்னிப்புக் கோரினால் மட்டுமே படத்தை வெளியிட அனுமதிப்போம் என அந்த இயக்கம் கடுமை காட்டியது.

இதையடுத்து, சத்யராஜ் இன்று தனது பேச்சுக்காக கர்நாடக மக்களிடம் மன்னிப்புக் கோரினார். அதன் முழுமையான காணொளி இதோ: