டுபாயில் பணிப்பெண்ணாக பணியாற்றிய இலங்கை பெண்ணொருவர் திருட்டுச் சம்பவமொன்று தொடர்பில் 7 வருடங்களுக்கு பின்னர் டுபாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஏழு வருடங்களுக்கு முன்னர் டுபாயில் அவர் பணிபுரிந்த வீட்டிலிருந்து பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றதாக வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் குற்றச்சாட்டப்பட்ட பெண் ஏழு வருடங்களுக்கு பின்னர் வேறு ஒரு முகவரூடாக டுபாய் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். இதனையடுத்தே டுபாய் பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், எதிர்வரும் 27 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

எவ்வாறாயினும் குற்றச்சாட்டை குறித்த பெண் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.