(ஆர்.யசி )

Image result for சுசில் பிரேமஜயந்த virakesari

திருகோணமலை எண்ணெய் குதங்களை எந்த காரணத்தை கொண்டும் இந்தியாவுக்கு கொடுப்பதற்கு அனுமதிக்க முடியாது. இலங்கையின் நிலங்களை ஆக்கிரமிக்கவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட திருகோணமலை உடன்படிக்கை செல்லுபடியற்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.