பெண்ணொருவர் தனக்கு பிறந்த குழந்தையை கொலை செய்வதற்காக, மர ஆலையிலுள்ள மரத்தூளில் 3 நாட்கள் புதைத்து வைத்திருந்த நிலையில் பணியாளர்களால் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் கிழக்குப்பகுதியிலுள்ள கிஸிலுநடால் மாகாணத்திலுள்ள படோக் நகரத்தில், 25 வயதான பெண்ணொருவர் ஏற்கனவே நான்கு வயதில் ஒரு குழந்தை இருப்பதனால், தனக்கு புதிதாக பிறந்த இரண்டாவது குழந்தையை தனது பெற்றோர் ஏற்கமாட்டார்கள் எனக்கருதி குழந்தையை மரத்தூளில் புதைத்து கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார். 

இந்நிலையில் பெண் பணிபுரிந்து வந்த  குறித்த மர ஆலையில், மூன்று நாட்கள் கடந்த நிலையில் குழந்தை அழும் சத்தம் கேட்ட ஆலைப் பணியாளர்கள் குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பெண் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ளவே, அவர்க்குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் குறித்த குழந்தையை தாயிடம் ஒப்படைப்பது குறித்தும், பெண்ணிற்கு எதிரான சட்ட நடவடிக்கையை எடுப்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.