பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளவுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயமானது தனிப்பட்ட விஜயமாக அமையவுள்ள நிலையில் மறுநாள் 26 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மதிய போசனத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்திய வெளியுறவுத்தறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் வெஷாக் பண்டிகை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.