பொலன்னறுவை மாவட்ட வைத்தியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8 மணிமுதல் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பிரதி செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.