‘தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறையைச் சேர்ந்த நான், கடந்த 30 ஆண்டுகளாக மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். உயிர்கொல்லி நோயான எயிட்ஸ்க்கு அடிப்படையாக திகழும் ஹெச் ஐ வி, ஹெபடைடீஸ் பி எனப்படும் ஹெச் பிவி கிருமிகள் தான் காரணம். இரத்தம், விந்து எனப்படும் உயிரணுக்கள் உள்ளிட்ட திரவங்கள் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் ஹெச் ஐ வி, ஹெச் வி பி கிருமிகளை அழிக்கும் மூலிகையை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டேன். குறிப்பாக 2008 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடத்திய ஆய்வில் அஸ்வகந்தா மற்றும் வல்லாரை மூலிகைகளின் உதவியுடன் ஹெச் ஐ வி மற்றும் ஹெச் வி பி கிருமிகளை கொல்லும் மூலிகை அல்லது சித்த மருந்தை கண்டறிய முடிந்தது.

ஈரோட்டில் உள்ள பெருந்துறை மருத்துவக்கல்லூரி, சென்னையிலுள்ள டான்சாக்ஸ் ஆராய்ச்சி மையம், டொக்டர் எம்ஜிஆர் மருத்துவ அறிவியல் பல்கலை கழகம், மும்பையில் உள்ள ரெலிகேர் நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வுக்கூடங்களில் ஆராய்ச்சி செய்து நான் கண்டுபிடித்துள்ள மூலிகை அல்லது சித்த மருந்து ஹெச் ஐ வி, ஹெச் பிவி கிருமிகளை அழிக்கவல்லது என்பதை நிருபித்துள்ளோம். இந்த மருந்துகளை 3 பேருக்கு 3 மாதங்கள் வரை அளித்து எனது ஆய்வு முடிவுகளை உறுதிப்படுத்தியுள்ளேன். நான் கண்டுபிடித்துள்ள மூலிகை மருந்தை 3 மாதங்கள் சாப்பிட்டால் ஹெச்ஐவி மற்றும் ஹெச்பிவி கிருமிகள் அழிக்கப்படுவதோடு, உயிரணுக்களில் உள்ள ஜீன்களின் அமைப்பியல் மற்றும் செயல்பாட்டியல் தன்மைகள் மேம்படும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் பெருகி நோயில் இருந்து விடுபடலாம். இந்த மருந்தின் விலை மாதத்திற்கு இந்திய மதிப்பில் 100 ரூபாய் மட்டுமே. தற்போது எம்முடைய மருந்திற்கு காப்புரிமை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். யாரேனும் முன்வந்து உதவினால் எம்முடைய மருந்தை மலிவு விலையில் கொடுத்து ஹெச்ஐவி மற்றும் ஹெச்பிவி கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளோரை காப்பாற்றலாம். நோயற்ற சமுதாயத்தை உருவாக்கலாம்.’ என்று பெங்களூரூ பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களின் முன்னிலையில் தெரிவித்தார் சித்த மருத்துவர் எஸ் மாதேஸ்வரன்.